யாவுமாலான இவ்வுலகம்


வேதியியல் படிப்பித்தவர்  அணுக்களாலானது என்றார்

இயற்பியல் ஆசிரியர்  கதிர்களாலானது என்றார்

தமிழ் கற்பித்தவர்  வார்த்தைகளாலானது என்றார்

வரலாறு பயிற்றுவித்தவர்  சம்பவங்களானது என்றார்

புவியியல் போதித்தவர் கற்களாலானது என்றார்

கணிதம் கற்பித்தவர் எண்களாலானது என்றார்

தத்துவம் பேசியவர்  எண்ணங்களாலானது என்றார்

நாடகம் கற்பித்தவர் காட்சிகளாலானது எனவும்

மதத்தைப் போதித்தவர் விதியாலனதெனவும் உரைத்தனர்.

நேற்றிரவு உலகம் கனவில் வந்தது.

எதனாலானதென கேட்டபொழுது

நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.

யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது

*************************************************************************

. Bookmark the permalink.

16 Responses to யாவுமாலான இவ்வுலகம்

  1. ரெட்டை, நமக்கு திருப்பி கிடச்சுட்டான்லே..
    அதை கொண்டாட்டி, பதிவுலகம் நம்மளை மதிக்காது மக்கா..

    எனவே..வரும் சனிக்கிழமை, சிங்கை மற்றும் சென்னையை சேர்ந்த
    மாபெரும் பதிவர்கள்..கண்ணகி சிலை முன்,
    கும்மியடிக்க கூடலாம் என பொதுக்குழு முடிவு செய்துள்ளது..

  2. பக்கா பக்கா...
    நல்லாயிருக்கு...

  3. You suppose to post this one in Athmaa..!

    You cheater...!

    Nowadays you started forgetting Aathma..!

  4. @@@@எதனாலானதென கேட்டபொழுது
    நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.
    யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது///

    பின்ர வாத்யாரே...சோக்கா கீதுமே..!!

  5. எல்லோரையும் கேட்டீங்க, பதிவர்களைக் கேட்க வில்லையே :-)

    நல்லாருக்கு சிந்தனை.

  6. பின்னிட்டிங்க போங்க... வாலுன்னா சும்மாவா?

  7. MUTHU says:

    ரெட்டை ரொம்ப நல்லா எழுதி இருக்க

  8. ஆனா.. ரெட்டை..அப்பப்ப வரே.. ஒரு பதிவ போடறே..
    காணாம போறே.. என்ன நடக்குது?.

  9. ஆணி அதிகமய்யா...நேத்து மதுரை...இந்த வாரமும் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கு! நல்லா வெய்ட்டா யாராவது வரண்டிழுத்தா சொல்லு...வந்து கும்மில கலந்துக்கறேன்!

  10. Thanks jilthanni...(வெயிலுக்கு அப்புறம் என்ன பேரு வைக்கிறேன்னு பார்க்கணும்!)

    K.R.P.Senthil, Kari, and Muthu!

  11. அரபுத்தமிழன் said...

    எல்லோரையும் கேட்டீங்க, பதிவர்களைக் கேட்க வில்லையே :-)

    நல்லாருக்கு சிந்தனை.

    ********************************************
    பதிவர்களை கேட்டிருந்தா என்ன சொல்லியிருப்பாங்க அரபு தமிழன்?

  12. //பதிவர்களை கேட்டிருந்தா என்ன சொல்லியிருப்பாங்க//
    பின்னூட்டங்களால் ஆனது ;)

  13. //பின்னூட்டங்களால் ஆனது//

    :-))

    மட்டுறுத்தலில்லாததுவா ?

  14. i expect more at the end

Facebook Share